FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவு வசதியுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் சேர 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தேர்வு மார்ச் 25 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபடி, துப்பாக்கி சுடுதல், மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடே, ஸ்குவாஷ், கடற்கரை கையுந்துபந்து மற்றும் வில்வித்தை உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவிகளுக்கு கிரிக்கெட் தவிர மேற்கண்ட அனைத்து போட்டிகளிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களுக்கான விளையாட்டு விடுதி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இங்கு, தடகளம் மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கு மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் 2016- 2017ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை மார்ச் 10ஆம் தேதி முதல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது இளையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக அல்லது நேரில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments