FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

இளம்பெண்ணை கிண்டல் செய்த மூவர் கைது

பெரம்பலூரில் இளம்பெண்ணை கிண்டல் செய்த இளைஞர்கள் 3 பேரை  போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 31 டிசம்பர் 2018, 10:10 am IST
பகிர்:

பெரம்பலூரில் இளம்பெண்ணை கிண்டல் செய்த இளைஞர்கள் 3 பேரை  போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் கெளசல்யா (19). இவர், பெரம்பலூரில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரிகிறார். 
இந்நிலையில், சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு  சென்று கொண்டிருந்தபோது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவரை பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் 3 பேர், அவரைக் கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசினாரம்.
இதுகுறித்து கெளசல்யா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி திடீர் குப்பத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் வடிவேல் (23), அதே பகுதியைச் சேர்ந்த மருதமுத்து மகன் ரஞ்சித் (23), பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலையை சேர்ந்த வீராசாமி மகன் ரூபேஷ் (24) ஆகியோரை கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments