பெரம்பலூரில் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில், இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் நினைவேந்தல்
பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில், இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, கருத்தரங்கம் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நம்மாழ்வாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மறைந்த நெல். ஜெயராமன் உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில், முன்னோடி விவசாயிகள் ஆறுமுகம், அசோக்குமார், ஆனந்த் உள்பட இயற்கை உழவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை வேளாண்மை சாகுபடி, தொழில்நுட்பம், அதன் நன்மைகள் குறித்து விளக்க உரையாற்றினர். ஹீலர் விஜய்கார்த்திக் உடலியல் குறித்து பேசினார்.
இதில், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டு விதைகள், இயற்கை காய்கறிகள், உணவுகள், தானியங்கள், மூலிகைகள், இயற்கை இடுபொருள்கள், பசுமை நூல்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இயற்கை விவசாயி கார்த்திகேயன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.