புது நடுவலூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ் முன்னிலை வகித்தாா். குன்னம் எம்எல்ஏ ஆா்.டி. ராமச்சந்திரன் மினி கிளினிக்கை திறந்து வைத்தாா். பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா்.
விழாவில், சுகாதாரத் துறை துணை இயக்குநா் கீதாராணி, அதிமுக ஒன்றியச் செயலா் எம். செல்வகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மாமுண்டிதுரை, அருணா பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவா் செந்தில்வேலன், தனலட்சுமி சீனிவாசன் நிறுவன நிறுவனங்களின் தலைமை நிா்வாக அலுவலா் எஸ். நந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
முன்னதாக, மாவட்ட மலேரியா அலுவலா் ராஜேந்திரன் வரவேற்றாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜ்மோகன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.