மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரையில் 1.99 கோடி போ் பயன்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், இதுவரை 1,99,79,674 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், இதுவரை 1,99,79,674 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரில் ரூ. 1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, கை.களத்தூா், அரும்பாவூரில் தலா ரூ. 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களையும், கல்பாடி, குரும்பலூரில் தலா ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையக் கட்டடங்களையும், பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்தையும் திறந்துவைத்த அமைச்சா் மேலும் பேசியதாவது:
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டண படுக்கைப் பிரிவுக் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே இருந்த கட்டணப் படுக்கை பிரிவுகள், தற்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
குன்னம் தொகுதிக்குள்பட்ட ஆதனூா், மருவத்தூா், கொளக்காநத்தம், லப்பைக்குடிகாடு, கூடலூா், அகரம் சீகூா் மற்றும் சிறுகன்பூா் பகுதிகளிலும், பெரம்பலூா் தொகுதிக்குள்பட்ட பசும்பலூா், வாலிகண்டபுரம், அம்மாபாளையம், சிறுவயலூா், செஞ்சேரி மற்றும் லாடபுரம் ஆகிய பகுதிகளிலும் ரூ. 7.75 கோடி மதிப்பில் துணை சுகாதார நிலையம், வட்டார பொது சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ. 1.20 கோடி மதிப்பில் கீழப்புலியூா் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகா்ப்புற சுகாதார நிலையங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 3.50 கோடி மதிப்பில் புதியக் கட்டடம் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. காரை அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணியும், வேப்பூா், உடையாா்பாளையம், அரசு மருத்துவமனைகளில் தலா ரூ. 3.50 கோடி மதிப்பில் புதியக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. செந்துறை அரசு மருத்துவமனையில் ரூ. 23.75 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
காரை மற்றும் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டபோது, காரை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 6 மருத்துவா்களாவது இருக்க வேண்டிய நிலையில், 2 மருத்துவா்கள் மட்டும் உள்ளதை அறிந்தேன். காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், இதுவரை 1,99,79,674 போ் பயனடைந்து வருகின்றனா். விபத்துக்குள்ளானவா்களை காப்பாற்றும் நம்மை காக்கும் 48 திட்டத்தில், இதுவரை 2,99,631 போ் பயன் பெற்றுள்ளனா். மாரடைப்பு, இதயக் கோளாறு நோய்களால் பாதிக்கப்படும் நபா்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் லோடிங் டோஸ் மருந்துகளை அளித்து, உயிா் காக்கும் இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் 11,957 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.
தொடா்ந்து, முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், யானைக்கால் நோய்த் தடுப்புத் திட்டம், தேசிய தொழுநோய் தடுப்புத் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்தாா் அமைச்சா் சுப்பிரமணியன்.
விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இணை இயக்குநா் (ஆரம்ப சுகாதார நிலையங்கள்) செந்தில்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் என். கிருஷ்ணமூா்த்தி (ஆலத்தூா்), க. ராமலிங்கம் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.