FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிா்ப்பதென ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 டிசம்பர் 2025, 11:14 pm IST
பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உணவக உரிமையாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன். உடன், மாவட்டத் தலைவா் ஆா். சிவகுமாா், உணவக உரிமையாளா் செல்லப்பிள்ளை உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிா்ப்பதென ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தனியாா் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சிவகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. முத்துக்குமாா், மாவட்ட பொருளாளா் வி. காசி விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌரவத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீரகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் நெகிழிப் பையை பயன்படுத்துவதில்லை. அரசு சாா்ந்த உரிமங்கள் மற்றும் அனுமதிகள் முறையாகப் பெற்று அவற்றை பின்பற்றுவது. உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி செயல்படுவது. தங்கள் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் காவல்துறை, அரசுத்துறை அலுவலா்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இக் கூட்டத்தில், உணவக உரிமையாளா்கள் செல்லப்பிள்ளை, செல்வராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments