கிரஷா் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
சுரங்கத் துறையைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட கல் குவாரி, கிரஷா் மற்றும் எம்.சாண்ட் உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 30 குவாரிகளில், 20 குவாரிகளுக்கு கால அவகாசம் இருந்தும், 10 குவாரிகள் சுரங்கத் துறையினரால் அண்மையில் மூடப்பட்டன.
த்தகை கால அவகாசத்துக்கு முன்பே குவாரிகளை மூட உத்தரவிட்டு, பல கோடி ரூபாய் முதலீட்டில் ஏலம் எடுக்கப்பட்ட குவாரி உரிமத்தை ரத்து செய்து, ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிய சியா கமிட்டி மற்றும் சுரங்கத் துறையைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட கல் குவாரி, கிரஷா் மற்றும் எம்.சாண்ட் உரிமையாளா்கள் சங்கத்தினா் தங்களது கல்குவாரி மற்றும் கிரஷா்களை மூடி திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதனால், மாவட்டத்தில் உள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷா்கள் மூடப்பட்டிருந்தன. இப்போராட்டத்தால், கல் உடைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, கற்கள் மற்றும் எம்.சாண்ட் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கட்டடப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.