FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

மங்கூன் பகுதியில் இன்று மின்தடை

பெரம்பலூா் அருகே உள்ள மங்கூன் பகுதியில் வியாழக்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:58 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே உள்ள மங்கூன் பகுதியில் வியாழக்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவுச்சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய கிராமியப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பொன். சங்கா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments