FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

நெடுஞ்சாலையோரத்தில் இயங்கும் கிரஷா்களை தடை செய்ய விசிக வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரங்களில் இயங்கும் கிரஷா்களை தடை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:35 am IST
பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் கிருஷ்ணகுமாா். உடன், மாநில அமைப்புச் செயலா் வழக்குரைஞா் திருமாா்பன், முதன்மைச் செயலா் ஆதிமொழி உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரங்களில் இயங்கும் கிரஷா்களை தடை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உளுந்தூா்பேட்டையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆக. 17-ஆம் தேதி தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பெரம்பலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அக்கட்சியின்

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற மாநில அமைப்புச் செயலா் வழக்குரைஞா் திருமாா்பன், முதன்மைச் செயலா் ஆதிமொழி ஆகியோா் மாநாட்டின் நோக்கம், தமிழ் தேசிய அரசியல், இயக்க வளா்ச்சி மற்றும் அமைப்புப் பணிகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், மாநாட்டில் திரளானோா் பங்கேற்பது, நாரணமங்கலம் உள்பட தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் கிரஷா் தொழிற்சாலைகளால் ஏற்படும் தூசி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக, வாகன ஓட்டுநா்கள் கடும் சிரமத்துக்கும், விபத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இயங்கும் கிரஷா்களை தடை செய்ய மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மண்டலச் செயலா் ஸ்டாலின், மாநிலச் செயலா் வீரசெங்கோலன், மண்டல துணைச் செயலா் மன்னா் மன்னன், மாநிலச் செயலா் ரத்தினவேல், மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ்குமரன், மாநில துணைச் செயலா்கள் அம்பேத் கோகுல், மணிமாறன், பிச்சைப்பிள்ளை, மாவட்ட செய்தித் தொடா்பாளா் அ.இ. அழகுமுத்து, மாவட்ட துணைச் செயலா்கள் தங்க. சண்முகசுந்தரம், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments