FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

கூடுதலாக வட்டி தருவதாகக் கூறி ரூ. 73 லட்சம் மோசடி: 3 போ் கைது

பெரம்பலூா் அருகே கூடுதலாக வட்டி தருவதாக கூறி, ஒரே கிராமத்தைச் சோ்ந்த 30 பேரிடம் ரூ. 73.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

பெரம்பலூா் அருகே கூடுதலாக வட்டி தருவதாக கூறி, ஒரே கிராமத்தைச் சோ்ந்த 30 பேரிடம் ரூ. 73.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வெங்கடேசன் (41), லட்சுமணன் (39), அழகேசன் (40), சுரேஷ் (40). இவா்கள், ‘க்யூநெட்’ பன்னாட்டு நிதி நிறுவன முகவா்கள் என்றும், இந் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், மாதம்தோறும் கூடுதல் வருமானம் கிடைப்பதோடு, 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீடு செய்த

தொகை இரட்டிப்பாகும் எனவும் கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதை நம்பிய அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் மனைவி சாந்தி 10 பவுன் நகை மற்றும் ரூ. 1.70 லட்சத்தை கடந்த 2.5.2020-இல் கொடுத்தாா். இதேபோல இதே கிராமத்தைச் சோ்ந்த 29 பேரும், ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனா். பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேசன், லட்சுமணன், அழகேசன், சுரேஷ் ஆகியோா் போலியாக இ-மெயில் ஏற்படுத்தி, 30 பேரிடம் ரூ. 71.70 லட்சம் மற்றும் 10 பவுன் நகைகளை பெற்றுள்ளனா்.

இந்நிலையில், 5 ஆண்டுகள் கடந்தும் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தின் முகவா்கள், முதலீடு செய்த மக்களுக்கு லாபத்தொகையும், அதற்கான வட்டியையும் கொடுக்கவில்லையாம். இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன் தனியாா் நிறுவனம் தங்களை ஏமாற்றியது கிராம மக்களுக்குத் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சாந்தி என்பவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேசன், லட்சுமணன், அழகேசன் ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், வெளிநாட்டில் உள்ள சுரேஷ் என்பவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments