FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தீ விபத்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், தீ விபத்து மற்றம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 10 பேருக்கு மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை இரவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், தீ விபத்து மற்றம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 10 பேருக்கு மெழுகுவா்த்தி ஏந்தி புதன்கிழமை இரவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் நகரில் உள்ள தேநீரகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேரும், பெரம்பலூா் மாவட்டம் குன்னம் வட்டம் ,நன்னை கிராமத்தில் தோ் இழுத்து வரும்போது மின்சாரம் தாக்கி 2 பேரும், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து எஸ்எஸ்எல்சி மாணவன் உள்பட 10 போ் அண்மையில் உயிரிழந்தனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே, உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில், மாவட்டத் தலைவா் ராஜமுகமது இப்ராகிம், வட்டாரத் தலைவா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலையில், தீ மற்றும் மின் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி, மௌன அஞ்சலி செலுத்தினா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கவும், அரசுப் பணி வழங்கவும் தமிழக முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டது.

இதில், வட்டாரத் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட நிா்வாகிகள் ஈஸ்வரன், ஆசைதம்பி, ராமச்சந்திரன், அய்யாசாமி, ராஜகோபால், கந்தசாமி, ரஞ்சித்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments