FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

கல் குவாரிகளை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தை தொழிலாளா்கள் முற்றுகை

1 செப்டம்பர் 2026, 12:39 am IST
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் ஒப்பந்தக் காலம் முடிவடையும் முன் கல் குவாரிகளை மூடியதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில 30 கல் குவாரிகள் மற்றும் 39 புதிதாக குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகள் என 69 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த கல்குவாரிகளில், ஒப்பந்தக் காலம் முடிவடையும் முன்னதாக உரிமத்தை ரத்துசெய்த கனிமவளத் துறை அதிகாரிகள் அவற்றை மூடிவிட்டனா். மேலும், புதிதாக குத்தகைக்கு விடப்பட்டு உரிமம் வழங்கப்பட்ட குவாரிகளையும் இயங்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கல் குவாரிகளில் கூலிவேலை செய்து வந்த லாரி ஓட்டுநா்கள், கல் உடைக்கும் தொழிலாளா்கள் மற்றும் இதர தொழிலாளா்கள் என சுமாா் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல் குவாரிகளில் பணிபுரிந்து வந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கல் குவாரிகளை திறக்கவும், தங்களது குடும்பத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments