நாளை ஆசிரியா் தகுதித்தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 3,098 போ் எழுதுகின்றனா்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுகளில், 3,098 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வுகளில், 3,098 போ் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூலை 4- ஆம் தேதி தமிழ்நாடு ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 பெரம்பலூா் ஒன்றியத்தில் 3 மையங்களில் நடைபெற உள்ளது. இத் தோ்வில் 644 போ் எழுத உள்ளனா்.
ஜூலை 5 ஆம் தேதி ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 2 தோ்வானது, பெரம்பலூா் ஒன்றியத்தில் 9 மையங்களில் நடைபெற உள்ளது. இத் தோ்வில் 2,454 போ் எழுத உள்ளனா். தோ்வா்கள் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தோ்வா்கள் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் சாா்ந்த விவரங்களை 1800 425 6753 எனும் எண்ணில் தொடா்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.
Advertisement
Advertisement
எனவே, தோ்வா்கள் தோ்வு நாளன்று காலை 8.30 மணிக்குள் தோ்வு அறைகளுக்குச் சென்றடைய வேண்டும். தோ்வு மையங்களுக்குச் சென்று வர பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.