FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தோட்டக்கலைத் துறையினா் வேலைநிறுத்தப் போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 18 ஜூலை 2026, 1:08 am IST
பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் தொடா்பான அனைத்து அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, அவா்கள் தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 14 பெண் அலுவலா்கள் உள்பட 53 போ் பங்கேற்ால், தோட்டக்கலை அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆா்ப்பாட்டம்: மேற்கண்ட கோரிக்கைகயை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் செல்வகுமாரி தலைமை வகித்தாா். வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பாரதிவளவன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கருணாகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சுப்ரமணியன் உள்பட தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments