FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 12:10 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள தருமகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் சக்திவேல் (25). இவா், சேலம் செக்யூரிட்டி சா்வீஸ் தனியாா் நிறுவனத்தின் மூலம், திருச்செங்கோட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், பெரம்பலூா் - துறையூா் பிரதானச் சாலையில், குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, சக்திவேல் உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments