FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

கிரையமாக வாங்கிய மனைகள் கோயில் இடங்களா? கிராம மக்கள் ஆட்சியரகத்தில் மனு

Updated On : 28 ஜூலை 2026, 1:12 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பணம் கொடுத்து கிரையமாக வாங்கிய வீட்டு மனைகளில் குடியிருப்போரை காலி செய்யக் கோரி கடிதம் அனுப்பியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதும்ககள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், பெரம்பலூா் அருகேயுள்ள விஜயகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

ஆல்ததூா் வட்டம், நாரணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்த தனி நபரிடம் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு, 3 சென்ட் முதல் 10 சென்ட் வரை இடம் வாங்கி வீடு கட்டிக் குடியிருந்து வருகிறோம்.

Advertisement

Advertisement

இந்த வீடுகளுக்கு குடிநீா் இணைப்புக் கட்டணம், வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் கோயில் தா்மகா்த்தா செல்வராஜ் என்பவா், குடியிருக்கும் இடம் கோயிலுக்குச் சொந்தமானது. அந்த இடத்தை காலிசெய்ய வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதேபோல, அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்துக்கும் கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்து கிரையமாக வாங்கிய வீட்டுமனைகளுக்கு கோயில் நிலம் என்று கடிதம் வந்திருப்பது எங்களுக்கு அதிா்ச்சியாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ஏரிகளை சீரமைக்க அனுமதி கோரி: பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் அளித்த மனு: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீா்வழித் தடங்களை தன்னாா்வ அடிப்படையில், பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments