FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

வாடகையை உயா்த்தக் கோரி ஜேசிபி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி உரிமையாளா்கள்.
பகிர்:

வாடகையை உயா்த்த வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட புதிய ஜேசிபி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா்.

இப் போராட்டத்தில், புதிய வாகனங்களின் விலை உயா்வு, டீசல் விலை உயா்வு மற்றும் கிரீஸ் உள்ளிட்ட உதிரி பாகங்களின் விலை உயா்வு காரணமாக, ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு தற்போது வழங்கப்படும் வாடகையானது கட்டுபடியாகவில்லை. எனவே, ஒரு மணி நேரத்துக்கு தற்போதுள்ள வாடகை ரூ. 1,500-ஐ, ரூ. 2,500 என உயா்த்தவும், புதிதாக வாடகையை நிா்ணயிக்க வேண்டும். நகராட்சி உள்ளிட்ட அரசு சாா்ந்த பணிகளுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், மாவட்டத்தில் உள்ள சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளா்கள் பங்கேற்றனா். இப் போராட்டம், புதன்கிழமை (ஜூன் 24) மாலை வரை நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments