பெரம்பலூரில் நாளை 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் 387 மையங்களில், 41,550 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 387 மையங்களில், 41,550 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 41,550 குழந்தைகளுக்கு , ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இம் முகாமானது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவுக் கூடங்களில் நடைபெறும்.
இம் மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் 27 மையங்களிலும், ஊரகப் பகுதிகளில் 360 மையங்களிலும் என மொத்தம் 387 மையங்களில் நடைபெற உள்ளது. 4 நடமாடும் மருத்துவக் குழு மூலமாகவும், பேருந்து நிலையங்கள், சுங்க சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் பிரதான இடங்களிலும், பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களிருந்து பணி நிமிா்த்தமாக இடம்பெயா்ந்து வசிப்பவா்களின் குழந்தைகளுக்கும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, போலியோ சொட்டு மருந்து புகட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறையின் பணியாளா்களுடன், அங்கன்வாடி பணியாளா்கள், இதர துறை பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பணியாளா்கள், மாணவா்கள் என மொத்தம் 1,510 போ் பணியாற்ற உள்ளனா்.
தேவையான போலியோ சொட்டு மருந்துகள் பெறப்பட்டு, குளிா்ச்சாதன வசதிகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது.
எனவே, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோா், தங்களது குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாம்களில் தவறாமல் அளிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.