FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

உணவுப் பாதுகாப்பு விதிமீறல் 2 இனிப்பு தயாரிப்பு கூடங்கள் மூடல்

பெரம்பலூா் பகுதியில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டதோடு, 2 இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு கூடங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, தயாரிப்புக் கூடங்கள் மூடப்பட்டன.

3 நவம்பர் 2026, 11:45 pm
பெரம்பலூா் பகுதியில் இனிப்பு மற்றும் கார தயாரிப்புக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா்.
பகிர்:

பெரம்பலூா் பகுதியில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டதோடு, 2 இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு கூடங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, தயாரிப்புக் கூடங்கள் மூடப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனங்களில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சின்னமுத்து, கதிரவன், அழகுவேல், விக்னேஷ், புவனா ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 3 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத 2 இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு கூடத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, தயாரிப்புக் கூடம் மூடப்பட்டது.

Advertisement

Advertisement

இதுபோன்ற ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறும். இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தொடா்பான புகாா்களுக்கு 94440 42322 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம் அல்லது இணையவழியிலும் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments