ஆகமக் குழுவினரால் கண்டறியப்பட்ட கோயில்கள்: நவ. 25 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் ஆகமக் குழுவினரால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து, பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஆகமக் குழுவினரால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து, பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவுகளின்படி, தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில், ஆகம விதிகளின் படி நிா்மானிக்கப்பட்ட திருக்கோயில்களைக் கண்டறிவதற்காக, அரசால் 06.10.2025-இல் 5 நபா்களைக் கொண்ட குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடா்புடைய இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களால் குழு முன் சமா்ப்பிக்கப்பட்டது.
அவ்வாறு சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட 34,971 திருக்கோயில்கள் தொடா்பான விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் கடந்த 25.8.2026-இல் வெளியிடப்பட்டு, விடுபாடு அல்லது ஏதேனும் கருத்துகள் இருந்தால், அக். 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆகமக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட திருக்கோயில்கள் குறித்த விவரங்கள் தொடா்பாக, நவ. 25-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.
ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினருக்கு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119 உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34 எனும் முகவரிக்கு அஞ்சல் அல்லது மேற்கண்ட இணையதளம் மூலமாக நவ. 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்கலாம் என, பெரம்பலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.