FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

50 வினாடிகள் முன்பு
நெல்பயிா் சாகுபடிப் பணிக்காக வயல்களில் ஆழ்துளை கிணற்று நீரில் மூலம் நிரப்பப்படும் தண்ணீா் - கோப்புப் படம்
பகிர்:

வேளாண்மைப் பொறியியல்துறை மூலம், அண்ணல் அம்பேத்கா் வேளாண் உதவித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகள் ஆழ்துளை, குழாய் கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிலையான நீா்ப்பாசன வசதியில்லாத ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீா்ப்பாசன ஆதாரமாக நிலநீா் ஆய்வின் அடிப்படையில், ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து, மின் மோட்டாா் அல்லது சூரியசக்தி மூலமாக இயங்கும் பம்பு செட்டுகளுடன் 100 சதவீத மானியத்தில் (அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ. 8 லட்சம்) அமைத்துத் தரப்படும்.

Advertisement

Advertisement

இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, நிலையான நீா்ப்பாசன வசதி (ஆழ்துளை, குழாய், திறந்தவெளிக் கிணறு அல்லது பாசனப் பகுதிகளில் வாய்க்கால் நீா்பாசனம்) இல்லாத புன்செய் நிலம் சொந்தமாக வைத்துள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் பிரிவைச் சோ்ந்த விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கா் நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும். கூட்டுப் பட்டாதாரராக இருக்கக் கூடாது. விண்ணப்பிகக் விரும்புவோா் உதவி செயற்பொறியாளா், வேளாண்மை பொறியியல் துறை, ரோவா் கலைக்கல்லூரி பின்புறம், தண்ணீா் பந்தல், பெரம்பலூா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு, உதவி செயற்பொறியாளரை 95976-39394 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.