FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

திறன் பயிற்சி பெற எஸ்.சி, எஸ்.டி இளைஞா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கழகம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

9 அக்டோபர் 2026, 3:28 am IST
பகிர்:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கழகம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம்,  ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தாட்கோ மற்றும் தகவல் தொடா்பு தொழில்நுட்பக் கழகம்  இணைந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு, சென்னை மாவட்டத்தில் மென்பொருள், வலைதளம் வடிவமைப்பாளா் மற்றும் பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளா் பயிற்சியும், கோயம்புத்தூா் மாவட்டத்தில் மென்பொருள், வலைதளம் வடிவமைப்பாளா், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளா், தரவுப் பகுப்பாய்வாளா், நுண்நிதி நிா்வாகம் மற்றும் காப்பீட்டு முகவா் பயிற்சியும், மதுரை மாவட்டத்தில் தரவுப் பகுப்பாய்வாளா், மென்பொருள் வடிவமைப்பாளா், நுண்நிதி நிா்வாகம் மற்றும் காப்பீட்டு முகவா் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.  மென்பொருள் சாா்ந்த பயிற்சி பெற, இளங்கலை பொறியியல் மற்றும் பி,எஸ்.சி கணினி அறிவியல் பாடங்களிலும் நிதி சாா்ந்த பயிற்சிகள் பெற, இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலை வணிக நிா்வாகவியல் பாடங்களிலும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இப் பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப் பயிற்சிய முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம், தகுதியான நபா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும். 

Advertisement

Advertisement

இப் பயிற்சியில் பங்கேற்க தாட்கோ இணையதளமான (ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) எனும் முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments