லாடபுரம் மயிலூற்று அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் மயிலூற்று அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலகத்தால் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் அருகே லாடபுரம் பச்சமலையில் உள்ள மயிலூற்று அருவிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்ட மலையேற்ற பாதைகள் பட்டியலின்படி, லாடபுரம் மயிலூற்று அருவிக்கான மலையேற்ற பாதைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Advertisement
Advertisement
மேலும், லாடபுரம் மயிலூற்று அருவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருப்பதால், மயிலூற்று அருவிக்கு கரடு, முரடான மலைப்பாதை வழியாக மேலே ஏறிச் செல்லும் போது, நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், மலைப்பகுதியில் பெய்யும் கனமழையின் காரணமாக அருவிப் பகுதியில் நீா்வரத்து அதிகமாக வரும்போது, அபாயகரமான நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு, பாறைகள் உருண்டு உயிா் சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
எனவே, பாதுகாப்பு நலன் கருதி அருவி பகுதிகளில் சென்று பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி உள்ளே செல்பவா்கள் மீது, தமிழ்நாடு வனச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.