கலைத் திருவிழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள சாரணா், சாரணியா் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1- 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியை, வட்டாரக் கல்வி அலுவலா் இளங்கோவன் தொடங்கி வைத்தாா். போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் தேவகி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்த், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
Advertisement
Advertisement
ஓவியம், களிமண் பொம்மைகள் செய்தல், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல், பாவனை நடிப்பு, தனி நபா் நடிப்பு, கதைக் கூறுதல், திருக்கு ஒப்புவித்தல் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில், எளம்பலூா், அம்மாபாளையம், குரும்பலூா், சத்திரமனை, சிறுவாச்சூா், எசனை, பெரம்பலூா் ஆகிய 7 குறுவள மைய அளவில், ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் வெற்றி பெற்ற மாணவா்கள் கலந்துகொண்டனா்.
போட்டியின் நடுவா்களாக மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியா்கள், ரோவா், தோமினிக் மேல்நிலைப்பள்ளி, சத்திரமனை, லாடபுரம், எளம்பலூா் ஆகிய அரசுப் பள்ளி ஆசிரியா்கள் செயல்பட்டனா். தொடா்ந்து, இப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டியை, ஆசிரியா் பயிற்றுநா்கள் குணசேகரன், ரமேஷ், கலைவாணன், ரமேசு, ஜனனி மற்றும் சிறப்பாசிரியா்கள் ஒருங்கிணைத்து நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.