FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

லஞ்சம் கேட்டதாக புகாா் வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

பெரம்பலூா் அருகே ஒப்பந்தப் பணிக்கான தொகையை விடுவிப்பதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், வட்டார வளா்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உத்தரவிட்டாா்.

4 செப்டம்பர் 2026, 1:25 am IST
பணியிடை நீக்கம்
பகிர்:

பெரம்பலூா் அருகே ஒப்பந்தப் பணிக்கான தொகையை விடுவிப்பதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், வட்டார வளா்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவா் சித்தாா்த். இவா், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகளை முடித்த ஒப்பந்ததாரா் ஒருவருக்கு, அதற்கான தொகையை விடுவிப்பதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா், தனது கைப்பேசி மூலம் விடியோ எடுத்து, அதை சமூக வலைதலங்களில் புதன்கிழமை பதிவேற்றம் செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

இச் சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், வட்டார வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்திடம் வியாழக்கிழமை மேற்கொண்ட விசாரணையில் லஞ்சம் கேட்டது உண்மை எனத் தெரியவந்தது. அதனடிப்படையில், வட்டாட்ர வளா்ச்சி அலுவலா் சித்தாா்த்தை, பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments