FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாராயம் காய்ச்சிய இருவர் கைது

கந்தர்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர் . 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

கந்தர்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர் . 
  கந்தர்வகோட்டை அருகேயுள்ள வீரடிப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக , கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ( பயிற்சி) பாஸ்கர் தலைமையிலான போலீஸார் வீரடிப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஓர் கரும்புத் தோட்டத்தில்   மோகனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (42), சேகர் (55) ஆகிய இருவரும் சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருள்கள் மற்றும் 20 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments