மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம்
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகாக்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், 9 பயனாளிகளுக்கு ரூ.1,000 -க்கான மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்கினார். மேலும், அரசின் உதவித் தொகைகள் பெறும் முறை குறித்து அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ச. சுரேஷ் கண்ணன், வட்டாட்சியர்கள் அறந்தாங்கி க.கருப்பையா, ஆவுடையார்கோவில் தனி பா. கிருஷ்ணவேணி, மணமேல்குடி தனி எஸ். சிவக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.