FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கஜா புயலால் பாதித்த மக்களுக்கு எல்.இ.டி, பல்புகள்

அறந்தாங்கி பகுதியில் கஜா புயல் பாதித்த இடங்களில் மூன்றாம் கட்டமாக  எல்.இ.டி.  சார்ஜர் பல்புகள் செவ்வாய் கிழமை வழங்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

அறந்தாங்கி பகுதியில் கஜா புயல் பாதித்த இடங்களில் மூன்றாம் கட்டமாக  எல்.இ.டி.  சார்ஜர் பல்புகள் செவ்வாய் கிழமை வழங்கப்பட்டன.
அறந்தாங்கி திசைகள் அமைப்பு மற்றும் சிலட்டூர் ஜம்பொன் அம்மாள் அறக்கட்டளை சார்பாக   புதுக்கோட்டை மாவட்டத்தில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட  இடங்களில்  இரு கட்டங்களாக பல்வேறு கிராமங்களுக்கு  எல்.இ.டி., பல்புகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை  மூன்றாவது  கட்டமாக , அரசர்குளம் கீழ்பாதி கிராமத்துக்கு  250 பல்புகளும், சேதுபாவசித்திரம் பகுதிக்கு  500 பல்புகளும், விளங்குடி கிராமத்திற்கு  300 விளக்குகளும் வழங்கப்பட்டன. 
திசைகள் அமைப்பின்  தலைவர் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி, ஜம்பொன் அம்மாள் அறக்கட்டளை தலைவர்  சேது.புகழேந்தி, பிரபு மற்றும்  செல்லத்துரை உள்ளிட்ட நிர்வாகிகள்  இதை  வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments