FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

உழவர் சந்தையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

அறந்தாங்கி கோட்டை ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை இரவு ஓம் என்ற எழுத்திலும்

Updated On : 31 டிசம்பர் 2018, 10:06 am IST
பகிர்:

அறந்தாங்கி கோட்டை ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை இரவு ஓம் என்ற எழுத்திலும்  முருகப்பெருமானின் வேலும் வைத்து மலர் அலங்காரம்  செய்யப்பட்ட ஐய்யப்பன். 
விழாவில்,  இணை இயக்குநர் (வேளாண் வணிகம்)ஆர். எம். சிவகுமார் தலைமை வகித்துப் பேசியதாவது:  நெகிழிகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் மட்காமல் இருக்கும் என்பதால் இது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் பிரச்சனை எனக் குறிப்பிட்டார். 
வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பயிற்சியாளர் முனைவர் கே. சி. சிவபாலன் பேசும்போது, இந்திய நகரங்களில் மட்டும் தினமும் 250 டன்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் உருவாகுவதாகக் குறிப்பிட்டார். இதில் மறு சுழற்சிக்குட்படும் பிளாஸ்டிக் வெறும் 10 சதவிகிதத்துக்கும் குறைவு தான் என்றும் அவர் கூறினார். புதுக்கோட்டை தூய்மை இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் பி. அஸ்வின் குமார் பேசும்போது, நாம் இருக்கும் வீட்டையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் சுகாதாரக் கேடு உண்டாகாமல் தடுக்க முடியும் என்றார்.
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாமல் துணிப் பைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுக்கோட்டை தாரகை ரெடிமேட் மற்றும் சில்க்ஸ் உரிமையாளர் முஹமது அப்சர் பொதுமக்கள் அனைவருக்கும் துணி பைகள் மற்றும் சணல் பைகளை வழங்கினார். 
விழாவில், 30 பெண்கள் உள்பட பொதுமக்கள் 75 பேர் மற்றும்  20 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  விழாவின் இறுதியில் அனைவரும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்று பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments