FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 ஜூன் 2018, 8:47 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,  மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 46 மாணவிகள் விடுதிகள், 19 மாணவர் விடுதிகள் உள்ளன. பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு 5 விடுதிகள், மாணவிகளுக்கு 4 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளில்  அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட  விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதி மாணவ, மாணவிகளுக்கு  உணவு, தங்கும் வசதி உள்பட அனைத்து அரசின் சலுகைகளும் வழங்கப்படும். தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்  நல அலுவலகம் அல்லது இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில்  இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments