FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா: தென்காசி மாட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா பற்றி....

Updated On : 27 ஜூலை 2026, 9:37 am IST
சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆடித்தவசுத் திருவிழா தேரோட்டம்.
பகிர்:

சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசுத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 8.30-க்கு சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வா், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

பிற்பகல் 12 மணியளவில் கோயிலில் இருந்து கோமதி அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறாா். மாலை 6.05 மணியளவில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் ஆடித்தவசுக் காட்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறாா்.

தவசு காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தா்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

A local holiday has been declared for Tenkasi district tomorrow on the occasion of the Aadi Thapasu festival at the Sankaranarayana Swamy Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments