மனைவி காணவில்லை: கணவன் போலீஸில் புகார்
விராலிமலை அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.
விராலிமலை அருகே மனைவியைக் காணவில்லை என கணவர் விராலிமலை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்துள்ளார்.
விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி புஷ்பம் (25). இவர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வீட்டில் இருந்து கடைவீதி சென்று வருவதாகக் கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது கணவர் உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். புகாரின் பேரில் விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.