வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரும் பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை பிறப்பு, இறப்புச் சான்றிதழ் கோரும் பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது.
நீதிமன்றங்களில் மூலமாக பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்று வந்தனர். கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவோர் நீதிமன்றங்களைத் தவிர்த்து, வருவாய்த் துறை விசாரணையின் மூலம் சான்று பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலத்திற்கு உள்பட்ட ஆலங்குடி, வல்லநாடு, வெண்ணாவல்குடி, கீரமங்கலம் என 4 வருவாய் சரகங்களில் இருந்து ஏராளமானோர் வருவாய் கோட்டாட்சியரிடம் பிறப்பு, இறப்பு சான்று கோரி மனு செய்திருந்தனர். இந்நிலையில், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் சான்றிதழ் கோரும் ஆவணங்கள் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது.
தொடர்ந்து, பயனாளிகளிடம் உரிய விசாரணை மேற்கொண்டு 95 பேருக்கு பிறப்பு சான்றிதழ்கள், 11 பயனாளிகளுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
முகாமில், வட்டாட்சியர் ரெத்தினாவதி, தனி வட்டாட்சியர் யோகேஸ்வரன், வருவாய் ஆய்வாளர்கள் ஆரோக்ய சேவியர், ரெங்கராஜ், வினோதினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.