பேராவூரணி அருகே காவிரியில் மூழ்கி இளைஞர் சாவு; உறவினர்கள் மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீழாத்தூர் அருகேயுள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21).
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீழாத்தூர் அருகேயுள்ள கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஈச்சன்விடுதி 42 கண்பாலத்தின் வழியாக செல்லும் காவிரி ஆற்றின் புதுப்பட்டினம் மெயின் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, மணிகண்டன் திடீரென மாயமானார்.
தகவலின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸார், பேராவூரணி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
மணிகண்டனை உடனடியாக மீட்டு தரக்கோரி புதன்கிழமை காலை ஆவணம் அருகே மணிகண்டனின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய வழித்தடங்களில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, மாயமான மணிகண்டனை புதுப்பட்டினம் மெயின்வாய்க்காலில் சடலமாக கிராம மக்கள் மீட்டனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.