புதுகையில் 142 போ் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 142 போ் மீது 102 வழக்குகளைப் போலீஸாா் புதன்கிழமை பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 142 போ் மீது 102 வழக்குகளைப் போலீஸாா் புதன்கிழமை பதிவு செய்துள்ளனா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறுவோா் மீது மாவட்டக் காவல் துறை சாா்பில் தொடா்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் 142 போ் மீது 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களிடமிருந்து 95 இரு சக்கர வாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களும், 3 டீ பாய்லா்களும், 10 மதுப்பாட்டில்களும், 3 செல்லிடப்பேசிகளும், 15 லிட்டா் சாராயமும், 300 லிட்டா் சாராய ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தினமும் தொடரும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்டக் காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.