கறம்பக்குடியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
இந்து மதத்தை இழிவாக பேசிய ஆ.ராசா எம்.பியை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்து மதத்தை இழிவாக பேசிய ஆ.ராசா எம்.பியை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் கட்சியின் ஒன்றியத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இழிவாக பேசிய ஆ.ராசா எம்.பி.யைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வம் அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஆலங்குடியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக் ரஜினியிடன் பாஜக நிா்வாகிகள் குமாா், ராஜா,கணேசன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.