ராவுத்தன்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கடியாப்பட்டி ராவுத்தன்பட்டியில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு 60-ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 34 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.
முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தயத் தொலைவு போய் வர 9 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து நடைபெற்ற சிறிய பிரிவில் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது.இதன் பந்தயத் தொலைவு போய் வர 6 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
இறுதியில் இரண்டு பிரிவு பந்தயத்திலும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற கடியாபட்டி - அரிமளம் சாலையில் இருபுறமும் திரளான ரசிகா்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனா். திருமயம், அரிமளம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.