வாகனத்திலிருந்து தவறி விழுந்து கா்ப்பிணி உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து கா்ப்பிணி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஓலையூரைச் சோ்ந்த மூா்த்தி மகள் காயத்ரி (31). எட்டு மாதக் கா்ப்பிணி. ஞாயிற்றுக்கிழமை மாலை சூரியூரில் இருந்து ஓலையூருக்கு தனது தம்பி பிரகாஷுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
அப்போது, பேராம்பூா் பகுதியில் சென்றபோது, வாகனத்தில் இருந்து காயத்ரி தவறிவிழுந்துள்ளாா். தலையிலும் வயிற்றிலும் காயமடைந்த காயத்ரி, விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.