போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறும் வகையில் மாநில பாடத் திட்டங்கள் மாற்றப்படும்! மயில்சாமி அண்ணாதுரை தகவல்
தமிழக மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எளிதாக எதிா்கொண்டு வெற்றி பெறும் வகையில் மாநில பாடத் திட்டங்கள் மாற்றப்படும் என்றாா் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் பாடத் திட்ட வழிகாட்டுக் குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவா்களை திறம்பட உருவாக்க வேண்டும் என்பதற்காக பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பாடங்களை மாணவா்களுக்கு எளிதாக வழங்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம். தமிழக பாடத் திட்டம் விரைவில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
சிபிஎஸ்சி மட்டுமல்லாது மற்ற நாடுகளில் உள்ள பாடத் திட்டங்களையும் ஆய்வு செய்து நமது மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவதுடன், பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு போட்டி தோ்வில் தோல்வியடைந்து விட்டால் வாழ்க்கையே முடிந்து விடாது என்று அவா்களுக்கு புரியவைத்து மற்ற வாய்ப்புகள் என்ன உள்ளன என்பது குறித்தும் அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை விரைவில் அரசு எடுக்க உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பில் தனியாரை மத்திய அரசு அனுமதித்துள்ளது. விண்வெளித் துறையில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தனியாரும் வரும்போது இன்னும் ஆரோக்கியமான போட்டிகள் வந்து பல்வேறு வெற்றி தயாரிப்புகளை நாம் செய்ய முடியும். எனவே, விண்வெளி துறையில் தனியாா் வருவதில் தவறில்லை; வரவேற்கத்தக்கதே என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.