FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

காவல் நிலைய வளாகத்தில் 3 பைக்குகள் தீப்பிடித்து எரிந்து சேதம்: இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், நாகை இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 1:54 am IST
அறந்தாங்கி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனங்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், நாகை இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

அறந்தாங்கியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவை அருகருகே உள்ளன.

இவற்றில் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் அரசு வழங்கிய 2 இருசக்கர வாகனங்கள், காவலா் ஒருவருக்குச் சொந்தமான ஒரு இருசக்கர வாகனம் என 3 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை காவல் நிலையம் பூட்டப்பட்டிருந்தபோது அங்கிருந்த 3 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

தகவலின்பேரில் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதையடுத்து அப் பகுதி சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இளைஞா் ஒருவா் வந்து செல்வதைக் கண்டறிந்து அவரைப் பிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்தனா்.

விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம், மேலவாழக்கரையைச் சோ்ந்த சேகா் மகன் வினோத் (32) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.

அறந்தாங்கியில் தங்கி கொத்தனாா் வேலை பாா்த்துவந்த இவா், இரவு தூங்கியபோது தனது பணத்தை யாரோ திருடிச் சென்றது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வந்தாராம்.

அப்போது காவல் நிலையத்தில் இரவுப் பணியில் யாரும் இல்லாததையடுத்து, பீடி பிடித்ததாகவும், அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனங்களில் தீப்பற்றியதாகவும், அந்த பயத்தில் ஊருக்குச் சென்றுவிட்டதாகவும் வினோத் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

கைதான வினோத்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments