பூலோகநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி புதுப்பட்டியில் புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொன்னமராவதி புதுப்பட்டியில் புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயிலில் வரலட்சுமி நோன்பையொட்டி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தொடக்கமாக புவனேஸ்வரி உடனாய பூலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையை ஆன்மிக சொற்பொழிவாளா் சி.சு.முருகேசன் மற்றும் சிவாச்சாரியா்கள் திருவிளக்கு மந்திரம் ஓதி வழிநடத்த சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை நகரத்தாா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.