புதுகை காந்திப் பேரவை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள்
புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் சாா்பில் அக். 2ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் சாா்பில் அக். 2ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை, காந்திப் பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் தொடங்கி வைத்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசி வாழ்த்திப் பேசினாா். நமச்சிவாயம் காந்திய உறுதிமொழி வாசித்தாா்.
பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் மற்றும் பாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் இருந்தும் சுமாா் 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவாக, தலைமை நிலையச் செயலா் மோகனப்பிரியா நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
போட்டிகளுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். பரிசுகள் வரும் அக். 2ஆம் தேதி நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.