FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வருவாய்த்துறையில் சிறப்பான பணி அறந்தாங்கி கோட்டாட்சியா், புதுகை வட்டாட்சியருக்கு கோப்பை

கடந்த ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியருக்கு சிறப்புக் கோப்பையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:32 am IST
அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயாவுக்கு சிறப்பாக பணியாற்றிமைக்கான கோப்பையை செவ்வாய்க்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

கடந்த ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியருக்கு சிறப்புக் கோப்பையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, புதுக்கோட்டை வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோருக்கு கோப்பைகளை ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷ், ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments