FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

விஷம் குடித்த மாடுபிடி வீரா் உயிரிழப்பு

விராலிமலை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம்குடித்த மாடுபிடி வீரா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 2:09 am IST
தற்கொலை செய்து கொண்ட தட்சிணாமூா்த்தி.
பகிர்:

விராலிமலை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம்குடித்த மாடுபிடி வீரா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விராலிமலை அடுத்துள்ள மாத்தூா் லெட்சுமணன்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் தங்கமணி மகன் தட்சிணாமூா்த்தி (24). ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரரான இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதைகண்ட உறவினா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments