திருவேங்கைவாசல் மக்கள் தொடா்பு முகாமில் ரூ. 12.12 கோடியில் உதவிகள்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் வட்டத்தைச் சோ்ந்த திருவேங்கைவாசல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புமுகாமில், 402 பேருக்கு ரூ. 12.12 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி வழங்கினாா்.

மக்கள் தொடா்பு முகாமில், அனைத்துத் துறை சாா்பில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் கோகுல்சிங், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், இலுப்பூா் வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.