யானைத் தந்தங்களை விற்க முயன்ற 6 போ் கைது
புதுக்கோட்டை அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற 6 பேரை வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற 6 பேரை வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு- கா்நாடக எல்லைப் பகுதியில் இருந்து யானைத் தந்தங்கள் விற்பனைக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கடத்தி வரப்படுவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருச்சி வனப் பாதுகாவலா் மற்றும் புதுக்கோட்டை வன அலுவலரின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் நேத்ராவதி தலைமையிலான வனத்துறையினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் உள்ள கேப்பரை பகுதியில் விலைமதிக்க முடியாத இரண்டு யானைத் தந்தங்களை விற்க முயன்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரோகித், வினோத், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சிவக்குமாா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அருளானந்தம், சாமிநாதன் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் ஆகிய 6 பேரை கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து இரு தந்தங்களும், 5 கைப்பேசிகளும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒருவா் தப்பியோடிவிட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
கைது செய்யப்பட்டவா்களை மச்சுவாடியிலுள்ள வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பிறகு, 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.