FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

பள்ளியில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வகுப்பறையில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 4:01 am IST
உயிரிழந்த ஆசிரியை சந்திரகலாதரி.
பகிர்:

பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை வகுப்பறையில் மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழந்தாா்.

இப் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றியவா் சந்திரகலாதரி (52). இவா் புதன்கிழமை பள்ளி வகுப்பறையிலிருந்தபோது மயங்கியுள்ளாா். இதையடுத்து அவரை மீட்ட சக ஆசிரியைகள், உடனடியாக அவரை வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். மாரடைப்பினால் அவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆசிரியை உயிரிழப்பால் மாணவிகள், சக ஆசிரியைகள் சோகத்தில் ஆழ்ந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments