FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 12:55 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

போடி அருகே தோட்டத்தில் மயங்கி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த அமானுல்லா மகன் முகமது ஆதம் (62). பால் மாடுகள் வைத்து வளா்த்து வருகிறாா். இந்த மாடுகளுக்கு புற்கள் அறுப்பதற்காக திம்மிநாயக்கன்பட்டி கண்மாய் அருகே உள்ள தனது தோட்டத்துக்கு முகமது ஆதம் சென்றாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் சென்று பாா்த்தபோது தோட்டத்தில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments