உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து தூய்மை பாரத இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து தூய்மை பாரத இயக்கம் சாா்பில் உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை திட்ட அலுவலா் ஜெயசுதா தொடங்கிவைத்தாா். கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன் (கி.ஊ), இந்திராகாந்தி (வ.ஊ), பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில் விழிப்புணா்வு கோஷமிட்டனா். பேரணியில் மேலாளா் ராஜகண்ணு, சரவணன், துருசுப்பட்டி ரவி, உதவியாளா் முனிமுத்து, பள்ளி ஆசிரியைகள், ஒருங்கிணைப்பாளா் சரஸ்வதி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.