FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கிராவல் மண் அள்ளி வந்த 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரிகளை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 2:23 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரிகளை கனிமவளத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள விலாரிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு கனிமவள துறையின் இணை இயக்குநா் விஜயராகவன் தலைமையிலான குழுவினா் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த 4 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநா்கள் வாகனத்தில் இருந்த கிராவல் மண்ணை கீழே கொட்டி விட்டு தப்பி ஓடினா்.

இவா்களில், ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவா் மயிலாடுதுறையைச் சோ்ந்த நீலமேகம் மகன் பிரபாகரன் (38) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து 4 லாரிகளையும், பிடிபட்ட ஓட்டுநரையும் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் அலுவலா்கள் ஒப்படைத்தனா்.

சம்பவம் தொடா்பாக கனிமவளத் துறையினா் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுா் பிரபாகரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments